The second great gathering
Sangam5 MaMadurai 2027 is the second great gathering of the SANGAM5 Movement — the occasion for announcing the resolve of the Tamil people who carry the ambition of giving ethical leadership to humankind within seventy years. Three Sangams are still spoken of with pride; the fifth Sangam we are building will be spoken of for as long as this world and human life endure.
Mark the date: 6–11 January 2027.
Six days, five expressions
- 6–7 January — Tamil Language Parliament at the Pillayar Centre, Madurai
- 8 January — The Rise 18th Global Summit of Tamil Entrepreneurs & Professionals
- 9 January — Global Tamil Jallikattu, TWI’s second global summit, the CTACIS referral business model and The Rise Global’s next decade
- 10 January — Keezhadi Global Tamil Unity Pongal
- 11 January — One Day Life in Thamizhoor, closing Sangam5 2027
How to take part
Interest is being captured now through the Register Your Interest form, in three options: One Day, Multiple Days or Complete Convergence. Registering your interest does not confirm a delegate place or pass; formal participation information will be shared as the programme develops.
Schedule subject to confirmation.
சங்கம்5 மாமதுரை 2027:
மாமதுரை சங்கம்5 நமக்கு உயிர். 70 ஆண்டு காலத்திற்குள் மனித குலத்திற்கே அறத் தலைமை ஏற்கும் வேட்கை கொண்டிருக்கும் தமிழ் இனத்தின் உறுதியினை அறிவிக்கும் இரண்டாம் பெருங் கூடல். மூன்று சங்கங்கள் இன்றும் பெருமிதத்துடன் பேசப்படுவது போல நாம் அமைக்கும் ஐந்தாம் சங்கமும் இந்த உலகமும் மனித வாழ்வும் உள்ள வரை பேசப்படும். இன்றே நாள் குறித்து கொள்ளுங்கள்: ஜனவரி 6-11, 2027.
தமிழ் மொழி பாராளுமன்றம்:
ஒரு இனத்தின் அழிவு ஓரிரு ஆண்டுகளில் நிகழ்வதல்ல. அது படிப்படியாக நிகழ்வது.
முதலில் அந்த இனத்தின் மொழி அழிக்கப்படும். அதிலும் அதன் எழுத்துருக்கள் அந்நியப்படுத்தப்படும். அதன் இலக்கணம் தேவையில்லை என்றாக்கப்படும். அம் மொழியின் அறக் கோட்பாடுகள் மக்களின் வாழ்விலிருந்து விலக்கப்படும்.
உண்மையில் தமிழ் மொழி தனது அழிவின் இரண்டாம் கட்டத்தை நெருங்கியுள்ளது. புரியும்படி சொன்னால் பள்ளிக் கல்வியிலிருந்தும் பயிற்றுவிப்பு மொழியாகவும் தமிழ் அகற்றப்பட்டிருப்பதால் இன்றைய தலைமுறை பிள்ளைகளால் தமிழ் பேச முடியும், ஆனால் எழுதவும் படிக்கவும் தெரியாது. இத்துடன் வேறு பல நெருக்கடிகளும் தமிழ் மொழியைச் சூழ்கின்றன. மீட்சிப் போர் உடனடியாகத் தொடங்கப் படாவிட்டால் அடுத்த 25 ஆண்டுகளில் அன்னைத் தமிழ் மிகவும் பலவீனப்படும், 50 ஆண்டுகளில் வழக்கொழிந்துவிட்ட லத்தின், சமஸ்கிருதம் போல் அருங்காட்சியக மொழியாக மாறும். எனவேதான் தமிழுக்காக அதிகாரப்பூர்வமாக பேசும் பேரறிஞர் கூட்டத்தினை "தமிழ் மொழி பாராளுமன்றம்" என்ற பெயரில் அணி திரட்டுகின்றன The Rise, CTACIS, TWI உள்ளிட்ட அமைப்புகள். ஜனவரி 6, 7 நாட்களில் மாமதுரை பில்லர் மையத்தில் நடைபெறும். அன்னைத் தமிழை நேசிக்கும் அனைவரும் பங்கேற்கலாம். ஜனவரி 6 மதிய உணவு, இரவு உணவு, ஜனவரி 7 மதிய உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்படும்.
The Rise18 – பதினெட்டாம் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் – திறனாளர்கள் மாநாடு:
ஜனவரி 8, 9 நாட்களில் ஐந்து முக்கிய நிகழ்வுகள் நடைபெறும்: The Rise18 – பதினெட்டாம் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் – திறனாளர்கள் மாநாடு; TWI-2 இரண்டாம் உலகத் தமிழ் பெண் தொழிலதிபர்கள் – திறனாளர்கள் மாநாடு; CTACIS – பரிந்துரை வணிக வடிவத்தின் உலக அறிமுகம் மற்றும் CTACIS சங்கமம்! இவை மூன்றும் தனித் தனியாக விளக்கப்படும். இவற்றுடன் உலகத் தமிழர் ஜல்லிக்கட்டு மற்றும் The Rise தலைவர்களுக்கு மட்டுமான தலைமைத்துவ மாநாடு – Leadership Summit.
உலகத் தமிழ் பெண் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் அமைப்பின் இரண்டாம் உலக மாநாடு மாநாடு:
TWI – உலகத் தமிழ் பெண் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் அமைப்பின் முதல் மாநாடு 2018-ம் ஆண்டு The Rise முதல் மாநாட்டிற்கு இணையாக பில்லர் மையத்தில் நடைபெற்றது. வழக்கறிஞர் கனிமொழி மதி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பில், அளவில் சிறிதாக இருந்தாலும் மிகச் சிறப்பாக இம்மாநாடு அரங்கேறியது. எட்டு ஆண்டுகளுக்குப் பின் பல்வேறு நாடுகளிலும் TWI அமைப்பு வேரோடி வரும் காலச் சூழலில் இரண்டாம் உலக மாநாடு திட்டமிடப்படுகிறது. இம்முறை பெண் தொழில் முனைவோரை ஆதரிக்கவும், உதவி உயர்த்தவும் உலகளாவிய ஆண் தொழிலதிபர்களும் அணிவகுத்து நிற்பார்கள் என்பது இம் மாநாட்டின் தனிச் சிறப்பாகும். ஒவ்வொரு நாடுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் TWI தலைவர்கள் உலகத் தலைவர்களாக அறிவிக்கப்பட்டு அறிமுகம் செய்து வைக்கப்படுவார்கள். அபுதாபி சகோதரி உமா புகழேந்தி அவர்கள் ஒரு சிறந்த உதாரணம். இவரைப் போல் பலர் உலகத் தமிழ் பெண் தலைவர்களாக எழுவார்கள்.
தமிழர் ஜல்லிக்கட்டு:
ஜல்லிக்கட்டு தமிழரின் பெருமைக்குரிய வீர விளையாட்டு. இதனை உலகமயப்படுத்தும் முயற்சியாக முதலாம் உலகத் தமிழர் ஜல்லிக்கட்டுப் போட்டியினை ஜல்லிக்கட்டின் திருவரங்கமான அலங்காநல்லூரில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் திரு. ராஜசேகர் ஐயா தலைமையில் The Rise அமைப்பு நடத்தியது. ஆண்டுதோறும் இதனை நடத்தி ஐந்து ஆண்டுகளில் பல்லாயிரம் உலக நாட்டவர்கள் இவ் வீர விளையாட்டினை காண தமிழகத்திற்கு பண்பாட்டுச் சுற்றுலா பயணியர்களாக வரவேண்டும் என்ற நோக்குடன் இவ் ஆண்டும் ஜனவரி 09 சனிக்கிழமையன்று நாம் நடத்த திட்டமிட்டுள்ளோம். மாமதுரை கலகலக்கும்!
CTACIS – Referal Business Model:
CTACIS அமைப்பு நம் எல்லோருக்கும் தெரியும். Confederation of Tamil Agriculture Commerce Industry & Services. தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம். The Rise அமைப்பினை பெற்றெடுத்த தாய் அமைப்பு. CTACIS அமைப்பு பின்பற்றும் பரிந்துரை வணிக முறைமை – Referal Business Model மிகவும் திறன் மிக்கது, வலிமையானது. சங்கம்5 மாநாட்டின் போது CTACIS அமைப்பும் Referal Business முன்மாதிரியும் உலகமயப்படுத்தப்படும். பிற நாடுகளிலும் CTACIS முன்மாதிரியில் கிளைகள் தொடங்க ஊக்குவிக்கப்படும். CTACIS அமைப்பின் மாபெரும் சங்கமமாகவும் இம் மாநாடு அமையும்.
கீழடி – உலகத் தமிழர் ஒற்றுமை பொங்கல்:
"உலகத் தமிழர் ஒற்றுமை பொங்கல்" ஜனவரி 10 ஞாயிறன்று தமிழர் தொல் வரலாற்றின் தாய்மடியான கீழடியில் நடைபெறும். கடந்த ஜனவரியில் கீழடியில் நாம் நடத்திய ஒற்றுமைப் பொங்கலின் அதிர்வலைகளை இப்போதும் இதனை எழுதுகிறபோது என்னால் உணர முடிகிறது. கடந்த ஆண்டை விட இவ்வாண்டு கீழடி ஒற்றுமைப் பொங்கலை மிகச் சிறப்பாகச் செய்வோம். உலகத் தமிழர் ஒற்றுமையின் மாபெரும் சங்க நாதமாக நமது கீழடிச் சங்கமம் அமையும்.
தமிழூர் பயணம் – தமிழூரில் ஒரு நாள் வாழ்க்கை:
ஜனவரி 11 திங்கட் கிழமையன்று தமிழூர் பயணம். தமிழூர் நிலப் பரப்பில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு 'தமிழூரில் ஒரு நாள் வாழ்க்கை' என்ற அனுபவப் பயணமாக கட்டமைக்கப்படுகிறது. அகத்தியர் அருவியில் குளித்துவிட்டு இரவு உணவுடன் சங்கம்5 2027 நிறைவுக்கு வரும். வாழ்க தமிழ்மொழி! வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழர் ஒற்றுமை!






